×

தென்காசியில் தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

தென்காசி, ஏப்.4: தென்காசி நகராட்சியில் தனி நபரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை நேற்று நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக மீட்டனர். தென்காசி நகராட்சிக்கு சொந்தமாக செங்குந்தர் தெருவில் 7 முக்கால் சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி அதனை மீட்க வேண்டும் என கடந்த 2015ம் ஆண்டு நகர திமுக செயலாளர் சாதிர் நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதையடுத்து நேற்று நகர்மன்ற தலைவர் சாதிர், நகர அமைப்பு அலுவலர் அப்துல் காதர், பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலி அமைத்து அந்த இடத்தை தனி நபர் ஆகிரமிப்பில் இருந்து மீட்டனர். இதன் மதிப்பு தற்போது ரூ.1.50 கோடி என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தென்காசியில் தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Tenkasi Municipality ,Sengundhar Street ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை