×

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கோரி போட்டா- ஜியோ ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர்,ஏப்.4: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று போட்டா-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் லட்சுமிகாந்த் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இதில் தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7-வது ஊதியகுழு நிர்ணயம் செய்தபோது, 21 மாத நிலுவைத் தொகையினை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post பழைய ஓய்வூதியத் திட்டத்தை கோரி போட்டா- ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : POTA ,Jio ,Tiruppur ,Tiruppur Collector ,POTA-Jio ,Tamil Nadu Government Employees Union District ,President ,Laxmikant ,Tamil Nadu Primary School Teachers' Alliance District ,Secretary… ,Dinakaran ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்