வாடிப்பட்டி, ஏப்.4:வாடிப்பட்டியில் பேரூர் திமுக சார்பாக கோடை வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள் நலன் கருதி திமுக தலைமை அறிவிப்புக்கு இணங்க, மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில், ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக என இரண்டு இடங்களில் துவங்கப்பட்ட இந்த நீர் மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு, பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமை வகித்து நீர் மோர் பந்தலினை துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், அவைத்தலைவர் திரவியம் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் ஜெயகாந்தன், ராம் மோகன், மருதுபாண்டி, எம்.எஸ்.முரளி, விஜி, அரவிந்தன், வினோத், ஜெயபிரகாஷ், ராஜசேகர், ராஜேந்திரன், முருகன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
The post திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.
