×

அறையில் பிணமாக கிடந்த பீகார் வாலிபர்

ராஜபாளையம், ஏப்.3: ராஜபாளையம் அருகே பீகார் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பீகாரை சேர்ந்த வாலிபர் அர்ஜூன்குமார். இவர் ராஜபாளையம், தென்காசி ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அர்ஜூன்குமார் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

உடனே அவரது உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சேத்தூர் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அறையில் பிணமாக கிடந்த பீகார் வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Rajapalayam ,Arjun Kumar ,Tenkasi Road, Rajapalayam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை