- குத்தலம்
- வானதிராஜபுரம் பஞ்சாயத்து
- குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
- ஆலங்குடி பஞ்சாயத்து
- மயிலாதுதுரை மாவட்டம்
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- நபார்ட்
- தின மலர்
குத்தாலம், ஏப். 3: மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட வாணாதிராஜபுரம் ஊராட்சி, குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,ஆலங்குடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.2 கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நபார்டு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் காந்த் நேற்று நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
குத்தாலம் வட்டாரம்,வாணாதிராஜபுரம் கிராமத்தில் கஸ்தூரி என்ற பயனாளி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடு, வாணாதிராஜபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம், அக்பர் தெருவில் பொது நிதியின் கீழ் ரூ.2 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 60 மீட்டர் நீளத்திற்கு தார்சாலை, ஆலங்குடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 25 இலட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.இவ்வாய்வின்போது குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோபனா, புவனேஷ்வரி, உதவி பொறியாளர்கள் பிரதீஸ்குமார், சோமசுந்தரம்,பணி மேற்பார்வையாளர்கள் கவிதா, சரவணன், ஊராட்சி செயலர்கள் மாரியப்பன், சக்திவேல், ஜெயபதி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
The post குத்தாலம் பகுதிகளில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.
