×

ஒன்றிய செயலாளர் தலைமையில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம், ஏப். 3:­ கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிரதாபராமபுரம், திருப்பூண்டிகிழக்கு, விழுந்தமாவடி ஆகிய ஊராட்சிகளில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி உறுப்பினர்களை வாட்ஸ் அப் சேனலில் இணைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ரெக்ஸ், ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரமணியன் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சௌரிராஜன், ஒன்றிய பொருளாளர் பூவைமுருகு, மாவட்ட பிரதிநிதி இளம்பருதி, மாவட்ட மருத்துவர்

அணி துணை அமைப்பாளர்கள் செல்வம், கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜயகுமாரி, ஒன்றிய பிரதிநிதி கந்தையன், வேளாங்கண்ணி பேரூராட்சி சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் நிர்மல்குமார், துணை அமைப்பாளர் வினோத், திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பாகநிலைய முகவர்கள் பிஎல்ஏ2, பிஎல்சி, தகவல் தொழில்நுட்ப அணி, வார்டு ஒருங்கிணைப்பாளர்கள், இளைஞரணியினர், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய செயலாளர் தலைமையில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Keezhayur East ,Union ,DMK Consultative Meeting ,Union Secretary ,Nagapattinam ,Keezhayur East Union DMK ,DMK ,Prathaparamapuram ,Thiruppoondi East ,Vidhimavadi ,WhatsApp ,Keezhayur East Union… ,Keezhayur East Union DMK Consultative Meeting ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை