×

கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள்

கந்தர்வகோட்டை, ஏப்.2: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நூலகத்துறை மூலம் கடந்த 1968 ஆம் ஆண்டு பகுதிநேர நூலகமாக தொடங்கபட்டு மக்கள் வளர்ச்சிக்கு ஏற்ப தற்சமயம் முழு நேர நூலாகமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் எழுதிய புத்தகங்களும், கவிஞர் கண்ணதாசன், மு.மேத்தா, வைரமூர்த்தி, சாண்டிலியன், சுரதா, லெஷ்மி, போன்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களும், பாரதியர் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், பட்டுக்கோட்டையர் புத்தகங்கள் உள்பட புதினம் புத்தகம், மருத்துவம், பொறியியல், சார்ந்த புத்தகம் உட்பட 37,496 புத்தகங்கள் உள்ளன. மேலும், தினசரி நாளிதழ்கள், வார இதழ், மாத இதழ், போன்றவை 140 இதழ்கள் இந்த நூலகத்திற்கு வருகிறது. இந்த நூலகத்திற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். இவர்கள் தினசரி நூலகத்திற்கு வந்து தேவையான புத்தகங்களை எடுத்து படித்து தேவைற்கு ஏற்ப நூலகர் அனுமதியுடன் வீட்டுக்கும் எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் ஒப்படைக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் கலந்து கொள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் தினசரி நூலகம் வந்து தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், படித்து அவர்கள் கொண்டு வரும் நோட்டுகளில் குறிப்பெடுத்து செல்கிறார்கள் மேலும் இந்த நூலகத்திற்கு இலவசமாக போட்டித் தேர்வு எழுதும் ஆண், பெண்கள் ஆகியோர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் வசதி உள்ளது.

இங்கு படித்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வில் வெற்றிபெற்று உள்ளனர் என்பது சிறப்பு .இந்த நூலகதை பற்றி போட்டி தேர்வு எழுதும் வாசகர்கள் கூறும்போது அரசு போட்டித் தேர்வில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை ஆண்டு வரை உள்ள பாடப்புத்தகங்களில் அதிக அளவில் வினாகள் வருவதால் நூலகத்திற்கு கல்வி துறை மூலம் இலவச புத்தகங்கள் வழங்க முன்வர வேண்டுமென போட்டித் தேர்வு எழுதும் வாசகர்கள் கேட்டுகொள்கின்றனர்.

The post கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் appeared first on Dinakaran.

Tags : Kandarvakota Branch Library ,Kandarvakota ,Tamil Nadu Government Library Department ,Pudukkottai District ,Kandarvakota Uratchi ,Uradachi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை