×

கோடியக்காடு சுந்தரம் பள்ளியில் மஞ்சள் பை திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வேதாரண்யம்,ஏப் 2: கோடியக்காடு சுந்தரம் பள்ளியில் மஞ்சள் பை திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் ஏற்படுத்தினார். இதையொட்டி பள்ளி வளாக சுவற்றில் வரையப்பட்ட வாசகங்களை எடுத்து கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்! துணி பைகளை பயன்படுத்துவோம். துணிப்பை என்பது எளிதானது. வீசி எறிந்தால் உரமாவது.

பிளாஸ்டிக் என்பது அழகானது வீசி எறிந்தால் விஷமாவதது என்னும் வாசகத்தை இளைய தலைமுறையான மாணவர்களிடம் எடுத்து கூறினார். மஞ்சள் பையை பயன்படுத்துவதை ஒவ்வொரு மாணவர்கள் வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியைகள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, புஷ்பா, இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் மீனாம்பாள், விக்னேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கோடியக்காடு சுந்தரம் பள்ளியில் மஞ்சள் பை திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kodiyakadu Sundaram School ,Vedaranyam ,Neelamegam ,Kodiyakadu Sundaram Government Aided Primary School ,Vedaranyam taluka ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை