×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம், ஏப். 2: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல்களக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வட்டார கல்வி அலுவலர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, முன்னால் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ஆனந்தன், கிராமப் பொறுப்பாளர் நாகு ஆகியோர் முன்னிலை வகித்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி அனைவரையும் வரவேற்றார்.அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : School ,R.S.Mangalam. ,R.S.Mangalam ,Panchayat Union Government Primary School ,Kothidalkalakudi ,District Education Officer ,Tamilarasi ,Thenmozhi ,School Anniversary ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை