- கோத்தகிரி
- நீல மலை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
- கோத்தகிரி நீல மலை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
- தின மலர்
ஊட்டி, ஏப். 2: கோத்தகிரி நகர பகுதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்தில் விட வேண்டும் என புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது. கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முகமது சலீம், கோத்தகிரி வனச்சரகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோத்தகிரி பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், பள்ளிக்கூடங்கள், தினசரி சந்தை, வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வியாபார கடைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. தினம்தோறும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் குரங்குகளால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் அச்சுறுத்தலை சந்திக்கின்றனர்.
ரைபிள் ரேஞ்ச் பகுதியில் ஒரு பெண், காமராஜர் சதுக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி பெண், கோவில்மேடு பகுதியில் ஒருவர் என பலரும் குரங்குகளால் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், பழைய காவல் நிலைய சாலை பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும் மின்சார ஒயர்களில் குருங்குகள் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அவர்களின் அன்றாட பணிகளும் பாதிக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து அடர்ந்த வனத்தில் விட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post கோத்தகிரி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை வனத்தில் விட வேண்டும் appeared first on Dinakaran.
