×

கப்பலூர் மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம்: கப்பலூர் மேம்பாலத்தில் இன்று காலை கன்டெய்னர் லாரி கவிழந்ததில் டிரைவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி இன்று காலை கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. மதுரை நான்குவழிச் சாலை வழியாக கப்பலூர் மேம்பாலத்தில் ஏறிய லாரி தூத்துக்குடி செல்லும் ரிங்ரோடு சாலையில் காலை 10.15 மணியளவில் திரும்பியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய பகுதியில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்து கன்டெய்னர் தனியாக பிரிந்து பாலத்தில் மற்றொரு பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் படுகாயமடைந்தார். பாலத்தில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, படுகாயமடைந்த லாரி டிரைவரை மீட்டு கிசிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரியை கிரேன் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கப்பலூர் மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம்; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kapalur ,flyover ,Thirumangalam ,Thoothukudi ,Dindigul ,Madurai ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...