×

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில், விசைத்தறிகள் மூலம், சுமார் ஏழு லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சுமார் 2.50 லட்சம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு, கடந்த 2022 பிப்ரவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வும் தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விசைத்தறியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால் 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Annamalai Report ,Chennai ,Tamil Nadu ,President ,Annamalai ,Goa ,Tiruppur ,Govai ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்