×

அதிமுகவும், பாஜவும் 2 ஆண்டுகளாக கள்ள உறவில் இருந்ததை தற்போது அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்: அமைச்சர் ராஜேந்திரன் தாக்கு

சேலம்: அதிமுகவும், பாஜவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ள உறவில் இருந்ததை, தற்போது அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார் என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட திமுக அலுவலகத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அளித்த ேபட்டி:
100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை, ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் சுங்கச்சாவடிகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்திருக்கும். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதனை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

இதனால், திமுக ஆட்சி தான் மீண்டும் அமையும். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று, தற்போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். இதை தான் கடந்த 2 ஆண்டுகளாக பாஜக, அதிமுக கள்ள உறவில் இருந்து வருகிறது என்று நமது முதல்வர் கூறி வந்தார். தற்போது அவர் சொன்னது நிரூபணம் ஆகி உள்ளது. திமுகவிற்கு போட்டி அதிமுக மட்டும் தான். இரண்டாவது இடத்திற்கு தான் மற்ற கட்சிகள் நீயா? நானா என்று போட்டி போட்டு வருகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

The post அதிமுகவும், பாஜவும் 2 ஆண்டுகளாக கள்ள உறவில் இருந்ததை தற்போது அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்: அமைச்சர் ராஜேந்திரன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Bajaj ,Minister ,Rajendran Thakku ,Salem ,Rajendran ,Atamukh ,Dimuka ,Salem District ,Minister of Tourism ,Atimug ,Rajendran Daku ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்