×

நவராத்திரி பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரி விழா மார்ச் 30 ம் தேதி(நேற்று) தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதி என மொத்தம் ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரியைத் தவிர,நவ சம்வத்சர், குடிபட்வா, சேட்டி சந்த், உகாதி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டுமக்கள் அனைவருக்கும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு எனது வாழ்த்துகள். இந்தப் புனிதமான தருணம் உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தைக் கொண்டு வரட்டும். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டில் புதிய சக்தியையும் அளிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

The post நவராத்திரி பண்டிகை பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Navratri festival ,New Delhi ,Navratri ,Modi… ,
× RELATED வங்கதேச பதற்றங்களுக்கு மத்தியில்...