- Thiruppuvanam
- மர்நாடு பாலம்
- திருப்புச்செட்டி
- திருப்புவனம்-மதுரை
- குடிமைப் பொருட்கள் குற்றப் புலனாய்வு காவல் துறை
- எஸ்ஐ திபாகர்
திருப்புவனம், மார்ச் 30: திருப்புவனம்-மதுரை நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி அருகே மார்நாடு பாலத்தில் நேற்று முன்தினம் ரேசன் அரிசி கடத்தி சென்ற வேன் டயர் பஞ்சர் ஆகி நின்று விட்டது. தகவலறிந்த குடிமைப்பொருள் குற்றப்புலானாய்வு போலீஸ் எஸ்.ஐ திபாகர் விசாரணை செய்தார்.
இதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சோமநாதபுரம், பொதுக்குடி,தொழிச்சாத்த நல்லூர், மணி நகர்,அண்டக்குடி ஆகிய பகுதிகளில் பொது விநியோகத் திட்டதிற்கான 1,575 கிலோ அரிசியை 35 மூட்டைகளில் வைத்து வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு, கோவை மாவட்டத்திற்கு கொண்டு செல்வது தெரிந்தது. வேனில் இருந்த அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்து பரமக்குடி சித்தாதித்தனை போலீசார் கைது செய்தனர்.
The post ரேசன் அரிசி வேனுடன் பறிமுதல் appeared first on Dinakaran.
