×

கிராம சபை கூட்டம்

காரிமங்கலம், மார்ச் 30: காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மண்டல அலுவலர் வேடியப்பன் தலைமை வகித்து, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசினார். இதில் பிடிஓ நீலமேகம், செயலாளர் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரியாம்பட்டி, கோவிலூர், காளப்பன அள்ளி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கூட்டத்தில் செயலாளர்கள் வெங்கடேஷ், முருகன், சரவணன், விஏஓக்கள் சிலம்பரசன், கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Grama Sabha ,Karimangalam ,Paisualli Panchayat ,Karimangalam Union ,World Water Day ,Zonal Officer ,Vediyappan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை