- காசி விஸ்வநாதர் கோயில்
- மகா கும்பாபிஷேகம்
- தென்காசி
- பழனி நாடார் எம்.எல்.ஏ
- Kumbabhishekam
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
- சுவாமி
- அம்மன் கோவில்
தென்காசி,மார்ச் 30: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் திருப்பணிகளை நேற்று பழனி நாடார் எம்எல்ஏ பார்வையிட்டார். தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்.7ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்காக சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் திருப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பழனி நாடார் எம்எல்ஏ தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, உள்பிரகாரம் பகுதிகளில் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணனிடம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், சண்முகவேல், பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ் பங்கேற்றனர்.
The post மகா கும்பாபிஷேகம் ஏப்.7ம் தேதி நடைபெறுவதால் காசிவிஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.
