- பிரேமலதா
- சென்னை
- தேமுதிக
- பொதுச்செயலர்
- தமிழ்நாடு காவல் துறை
- பொன்வண்ணன்
- உசிலம்பட்டி
- முத்துக்குமார்
- கம்பம்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை சுட்டு பிடித்து உள்ளது என்ற செய்தி வரவேற்கத்தக்கது. இந்த ரவுடி கும்பல் மக்களுக்கு பாதுகாப்பு தரும் காவலரையே எரித்தும், மற்றொரு காவலரை சுட்டு கொலையும் செய்துள்ளார்கள். தமிழக காவல் துறை இதுபோன்று சிறந்த முறையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் தான், குற்ற வழக்குகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே, இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வண்ணம் தமிழக மக்களை காப்பாற்ற முடியும். எனவே சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post ரவுடிகள் சுட்டுபிடிப்பு பிரேமலதா வரவேற்பு appeared first on Dinakaran.
