×

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு இது.. வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழுமையான அர்ப்பணிப்புடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு, கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றனார். அப்போது பேசிய அவர்;

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு இது: முதல்வர்
சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழுமையான அர்ப்பணிப்புடன் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.

வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதல்வர்
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் 6% குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளால் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post சமூக நீதியை நிலைநாட்டும் அரசு இது.. வன்கொடுமை வழக்குகள் 6% குறைந்துள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Dravitha Model Government ,MLA ,Mu. K. Adi Dravidar ,Tribal Welfare Commission ,Chennai Chief Secretariat ,Stalin ,Dinakaran ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...