×

விருதுநகரில் ஏப்.20 வரை நடக்கிறது 77வது கேவிஎஸ் பொருட்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

 

விருதுநகர், மார்ச் 29: விருதுநகரில் 77வது கேவிஎஸ் பொருட்காட்சியை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் மாதவன், கே.வி.எஸ் மேனேஜிங் போர்டு செயலாளர் முரளிதரன், தலைவர் செல்வ கணேஷ், உப தலைவர் சின்னக்கண், இணைச்செயலாளர் அருண், பொருளாளர் ரத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்ச் 28 முதல் ஏப்.20 வரை நடக்கும் பொருட்காட்சியில் கலை நிகழ்ச்சிகள், மீன் கண்காட்சி, சீனா கொலம்பஸ், ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதியோர்கள் பொருட்காட்சி மைதானத்தை சுற்றிவர பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சி ஒருங்கிணைப்பு பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், மாணிக்கவேல், பாலாஜி, கண்ணபிரான் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 

The post விருதுநகரில் ஏப்.20 வரை நடக்கிறது 77வது கேவிஎஸ் பொருட்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : 77th KVS Exhibition ,Virudhunagar ,Ministers ,Chathur Ramachandran ,Gold South Narasu ,Sinivasan M. L. A ,Mayor Madhavan ,K. V. S Managing Board Secretary ,Muralitharan ,Selva Ganesh ,
× RELATED ஓய்வூதியர் தின விழா