புதுக்கோட்டை, மார்ச் 29: புதுக்கோட்டை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று 21,789 பேர் பங்கேற்று எழுதினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் (28ம் தேதி) நேற்று துவங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில், புதுக்கேட்டை மாவட்டத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 11,107 மாணவர்களும், 11,068 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்களாக 111 மாணவிகள், 57 மாணவிகள் என மொத்தம் 22,343 பேர் தேர்வு எழுதுவதற்காக அனுமதிச் சீட்டு பெற்று தேர்வு எழுத இருந்தனர்.
அதன்படி, நேற்று புதுக்கேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை 10,738 மாணவர்களும், 10,895 மாணவிகளும் மற்றும் தனித் தேர்வர்களாக 103 மாணவர்களும், 53 மாணவிகளும் என மொத்தம் 21,789 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 554 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வை கண்காணித்திடும் வகையில், 260 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்றது. மேலும், நேற்று நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை எழுத முடியாத மாணாக்கர்கள் அனைவரும் இனிவரும் தேர்வுகளை சிறந்த முறையில் எழுத வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 21,789 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.
