×

20 நாள் கால்ஷீட்டுக்கு ரூ.100 கோடி பிரபாசுக்கு வில்லன் ஆகிறாரா கமல்?

ஐதராபாத்: பிரபாசுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. கமல்ஹாசன் இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்திலும், அதன் பிறகு ஹெச். வினோத் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’ (தற்காலிக தலைப்பு). இதில் பிரபாசுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இது உருவாகி வருகிறது. பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க அவருக்கு ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பேசப்படுகிறது. இதற்கு முன் பலமுறை வில்லன் வேடங்களில் நடிக்க அழைத்து அவற்றை கமல்ஹாசன் மறுத்துள்ளார். அதனால் இந்த படத்தில் சம்பளத்துக்காக அவர் நடிக்க சம்மதிப்பது சந்தேகமே என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

The post 20 நாள் கால்ஷீட்டுக்கு ரூ.100 கோடி பிரபாசுக்கு வில்லன் ஆகிறாரா கமல்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : kamal ,Hyderabad ,Kamalhaasan ,Shankar ,Raghul Preet Singh ,Kajal Agarwal ,Priya Bhavani Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...