சிவகங்கை, மார்ச் 29: சிவகங்கை மாவட்டகலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உலக தண்ணீர் தினமான கடந்த 22ம் தேதி அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகித்தினை உறுதி செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இன்று கிராம சபைக்கூட்டம் appeared first on Dinakaran.
