×

பெட்டிக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?

கீழ்பென்னாத்தூர், மார்ச் 29: கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையில் நேற்று கீழ்பென்னாத்தூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஸ் பாபு தலைமையில் சுகாதார ஆய்வாளர் குழு திருவண்ணாமலை-விழுப்புரம் வேட்டவலம் சாலையில் உள்ள கோணலூர், வேளானந்தல், கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்றும், அயோடின் கலந்து உப்பு விற்பனை செய்யப்படுகிறதா என்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு, சுகாதார ஆய்வாளர்கள், வெங்கடேசன், சண்முகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

The post பெட்டிக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,Union ,Regional Medical Officer Saravanan ,Regional ,Health ,Supervisor ,Satheesh Babu ,Konalur, Velanandal ,Tiruvannamalai-Villupuram Vettavalam road ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி