புதுச்சேரி, மார்ச் 29: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(27). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கடந்த 11ம் தேதி பெண் ஒருவர் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். பின்னர் உருளையன்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பிரகாஷ்ராஜ், அப்பெண்ணுடன் மதுபோதையில் உல்லாசம் அனுபவித்து போதையில் மயங்கியுள்ளார். அப்போது அப்பெண் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள். விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடி சென்றார். இது குறித்து பிரகாஷ்ராஜ் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், புதுச்சேரி சீனியர் எஸ்பி கலைவாணன் அறிவுறுத்தலின்பேரில், கிழக்கு எஸ்.பி. ரகுநாயகம் உத்தரவின்பேரில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் உள்ளடக்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இதில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாஞ்சாலி (எ) கலையரசி என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாஞ்சாலியை கடந்த 25ம் தேதி கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாஞ்சாலியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பாஞ்சாலிக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் பாஞ்சாலி அவ்வப்போது விபசாரத்தில் ஈடுபட புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
அதுபோல சம்பவத்தன்று புதுவைக்கு வந்தபோதுதான் ரியல் எஸ்டேட் அதிபரை உல்லாசத்திற்கு அழைத்து, அவர் போதையில் மயங்கியவுடன் அவர் அணிந்திருந்த நகை, செல்போனை திருடிச் சென்றுள்ளார். பாஞ்சாலி மீது பெண்ணாடத்தில் ஒரு அடிதடி வழக்கும் உள்ளது. பாஞ்சாலி விபசாரத்திலும், திருட்டிலும் ஈடுபட்டு வந்த பணத்தை கொண்டு ஜெயங்கொண்டத்தில் வீடு கட்டி வந்துள்ளார். பிரகாஷ்ராஜிடம் திருடிய நகையில் அவரது வீட்டில் வைத்திருந்த 2.5 பவுன் மற்றும் செயினை விற்று செலவு செய்தது போக மீதம் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை தனிப்படையினர் கைப்பற்றினர். பின்னர் விசாரணை முடிந்ததும் மீண்டும் பாஞ்சாலியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
The post பெண்ைண காவலில் எடுத்து விசாரணை ரியல் எஸ்டேட் அதிபரிடம் திருடிய நகைகள் மீட்பு appeared first on Dinakaran.

