×

மது விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 29: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி எஸ்ஐ மாரப்பன் உள்ளிட்ட போலீசார் மங்களம்கொட்டாய் பகுதியில் நேற்று குற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மங்களம் கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே, பெட்டிகடை பின்புறம் கள்ள தனமாக மது பானத்தை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த செல்வம் (47) என்பவரை போலீசார் கைது செய்து, 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pappireddipatti ,Bommidi SI Marappan ,Pappireddipatti taluk ,Dharmapuri district ,Mangalamkottai ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை