×

ரம்ஜானை முன்னிட்டு காயல்பட்டினத்தில் நல உதவி வழங்கல்

ஆறுமுகநேரி, மார்ச் 29: காயல்பட்டினத்தில் ரம்ஜானை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் முகைதீன் பிச்சை தலைமை வகித்தார். நகர தலைவர் ஹம்சா முகைதீன், புறநகர் தலைவர் ரஜினி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் சற்குரு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட காங். துணை தலைவர் சங்கர் கலந்து கொண்டு 250 பேருக்கு வேட்டி, சேலை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் பார்த்தசாரதி, வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, கோதண்டராமன், பன்னம்பாறை ஊராட்சி முன்னாள் தலைவர் அழகேசன், வட்டார துணை தலைவர் சேகர், நிர்வாகி முத்து வாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரம்ஜானை முன்னிட்டு காயல்பட்டினத்தில் நல உதவி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kayalpattinam ,Ramzan ,Arumuganeri ,Congress ,Chief Coordinator ,Mukaidin Pichai ,City President ,Hamza Mukaidin ,Suburban ,President ,Rajini Murugan ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை