×

சேரன்மகாதேவி அருகே பெண்ணை மிரட்டியவர் கைது

நெல்லை, மார்ச் 29: சேரன்மகாதேவி அருகேயுள்ள திருவருத்தான்புளி மேற்கு தெருவை சேர்ந்த செலின்ஷிஜா (44). இவரது குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் (40) குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27ம்தேதியன்று செலின்ஷிஜா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்புராஜ் அவரிடம் தகராறு செய்து, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து செலின்ஷிஜா சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post சேரன்மகாதேவி அருகே பெண்ணை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi ,Nellai ,Selinshija ,Thiruvaruthanpulli West Street ,Subbaraj ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை