×

மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ளன: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “மேற்குவங்கத்தை தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் இணைந்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2025 மார்ச் 1 வரை ரூ.1.26 லட்சம் மதிப்பிலான 8.9 கோடிக்கும் அதிகமான மருத்துவமனை சேர்க்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மார்ச் 20ம் தேதி நிலவரப்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு 10.21 லட்சம் அட்டைகள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு 14.47 லட்சம் அட்டைகள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 14.76 லட்சம் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, 13,866 தனியார் மருத்துவமனைகள், 17,091 பொது மருத்துவமனைகள் உள்பட 30,957 மருத்துவமனைகள் இந்த திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன” என்றார்.

The post மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ளன: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Ayushman Bharat ,New Delhi ,Union Health Minister ,J.P. Nadda ,Union ,Pradhan ,Jan Arogya Yojana ,Ayushman Bharat… ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...