- வேட்டையன்விளை மனோ கல்லூரி
- வேட்டையன்விளை
- வேட்டையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி
- சுந்தரவடிவேல்
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்
- பலவேச கிருஷ்ணன்
- திருச்செந்தூர் அரசு மருத்துவமனை...
- தின மலர்
திசையன்விளை, மார்ச் 29: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பலவேச கிருஷ்ணன் வரவேற்றார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகலா, செவிலியர்கள் ஞானம் கலையரசி, ெஹலன் வசந்தா மேரி, சந்தானசெல்வி, ஆய்வக பரிசோதகர்கள் சுமதி, உலகம்மாள், மகேஸ்வரி ஆகியோர் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வல மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
The post திசையன்விளை மனோ கல்லூரியில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.
