×

மேத்தால் அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

பாடாலூர், மார்ச் 28: மேத்தால் அரசு பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 553 அரசு பள்ளிகளில் கடந்த 1ம்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை துவங்கி பள்ளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா மேத்தால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியை இந்திரா தேவி தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பள்ளியில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால், கிடைக்கும் பயன்கள், 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம், எண்ணும் எழுத்தும் செயல்பாடுகள் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு, வீடாக வழங்கினர்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் ஆசிரியர்கள் அன்பழகன், கல்பனா, சதீஷ்குமார், உஷா இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மேத்தால் அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : admission awareness ,Methal ,Government Middle School ,Patalur ,Methal Government School ,Tamil Nadu ,Chief Minister… ,Government ,Middle School ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை