×

அரியலூர் மாவட்டத்தில் 32 கோயில்களில் பாதுகாவலர் பணி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

 

அரியலூர், மார்ச் 28: அரியலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூா் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் அடையாள அட்டை, பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் -1, படை விலகல் சான்று நகல், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றார்.

The post அரியலூர் மாவட்டத்தில் 32 கோயில்களில் பாதுகாவலர் பணி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Hindu Religious Endowments Department ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை