×

குளிர் பதன கிடங்கு அமைக்க அரசு மானியம்

 

மதுரை, மார்ச் 28: மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலைதுறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை தரம் குறையாமல் சேகரித்து ஏற்றுமதி செய்யவும், உள்ளூர் சந்தைகளின் விற்பனையை ஊக்குவிக்கவும் முன் குளிர் பதன கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. வெளி மண்டல வெப்ப நிலை கட்டுப்பாட்டு முறையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களை சேமிப்பதால் முன் குளிர் பதன கிடங்கு அமைப்பது ஏற்றுமதிக்கும், தரமான பொருட்களை விற்பனை செய்யவும் உதவுகிறது.

இதன்படி முன் குளிர் பதன கிடங்கு அமைக்க 35 சதவீதம் மானியமாக 6 மெட்ரிக் டன்னிற்கு ரூ.8.75 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்க மதுரை மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்க விரும்புவோர், மதுரை தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, மதுரை தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குளிர் பதன கிடங்கு அமைக்க அரசு மானியம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Horticulture Department ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை