மதுரை, மார்ச் 28: மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம் நாளை (மார்ச் 29) நடைபெறுகிறது. இதில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது உள்ளிட்ட்வை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாளிகள் தேர்வு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
The post மாவட்ட ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
