×

டூவீலர் விபத்தில் காயமடைந்த சிறப்பு எஸ்ஐ பலி

 

தேனி, மார்ச் 28: தேனி அருகே போடேந்திரபுரம் பிரிவில் டூவீலர் விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு எஸ்ஐ ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று முன் தினம் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (59). இவர், போடி பகுதிக்கான நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 18ம் தேதி காலை 10 மணியளவில் தேனியில் இருந்து கம்பத்திற்கு டூவீலரில் சென்றார்.

தேனி அருகே போடேந்திரபுரம் பிரிவில் வந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அழகர்சாமி வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அழகர்சாமியின் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் காயமடைந்த சிறப்பு எஸ்ஐ பலி appeared first on Dinakaran.

Tags : Special SI ,Theni ,Bodendrapuram ,Alagarsamy ,Kambam Gramachaavadi Street ,Theni district ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை