×

மூணாறு அருகே புலி நடமாட்டம்

 

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ளது மாட்டுப்பட்டி அணை உள்ளது. இங்கு அரசு மின்சார துறையின் கீழ் சுற்றுலா படகு சவாரி மையம் செயல்பட்டு வருகிறது. அணையில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் கரையோரங்களில் உள்ள புல் மேடுகளில் காட்டு யானை, காட்டு எருமை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு வருவது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் அணையில் படகு சவாரிகள் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள் சிலர் கரையோரத்தில் புலி நடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கரையோரத்தில் நடமாடிய புலி சுற்றுலா பயணிகளை கண்டு மெதுவாக நடந்து காட்டிற்குள் சென்றது. புலி நடந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post மூணாறு அருகே புலி நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiger movement ,Munnar ,Mattupatti dam ,Kerala ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை