×

டபிள்யூ.பி.எல்லில் அணிகளை உயர்த்த முடிவா? ஐபிஎல் சேர்மன் பதில்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் நடத்துவது போல், மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இருக்கின்றன. சமீபத்தில் நடந்த 3வது சீசன் டபிள்யூ.பி.எல்., டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி கோப்பையை வென்றது.

இந்த டபிள்யூ.பி.எல். போட்டி தொடங்கும்போது 3 சீசன் முடிந்தபின், அணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் ரோஜர்பின்னி உள்ளிட்ட குழுவினருடன் ஐபிஎல் சேர்மர் அருண் துமால் ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்திற்கு பின் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறுகையில், ‘‘மகளிர் பிரிமீயர் லீக் போட்டியை இன்னும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

அதனை செய்து முடித்த பிறகே கூடுதல் அணிகளை சேர்ப்பது பற்றி முடிவெடுக்கப்படும். அதனால், தற்போது டபிள்யூ.பி.எல். அணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆரம்பத்தில் இருந்ததை விட இந்த சீசனில் மகளிர் கிரிக்கெட்டை பார்க்க மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வியப்பூட்டும் வகையில் வளர்ச்சியை பெற்றுள்ளோம். இது மகளிர் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும்,’’ என்றார்.

The post டபிள்யூ.பி.எல்லில் அணிகளை உயர்த்த முடிவா? ஐபிஎல் சேர்மன் பதில் appeared first on Dinakaran.

Tags : WPL ,IPL ,New Delhi ,Indian Cricket Board ,Women's Premier League ,T20 ,Mumbai Indians ,Delhi Capitals ,Bangalore Royal Challengers ,Gujarat Giants ,U.P.… ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...