×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: காலிறுதியில் நுழைந்த ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி

மான்செஸ்டர்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மேன்சிட்டி அணியை வெற்றி வாகை சூடி காலிறுதிக்குள் நுழைந்தது. மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் – மேன் சிட்டி அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். போட்டியின் 22வது நிமிடத்தில் அந்த அணியின் வினிசியஸ் ஜூனியர், தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அட்டகாசமாக கோல் போட்டு அசத்தினார்.

அதற்கு முன்னதாக, 20வது நிமிடத்தில் மேன்சிட்டி அணியின் பெர்னார்டோ சில்வா முரட்டுத்தனமாக ஆடியதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின், 41வது நிமிடத்தில் மேன் சிட்டி அணியின் எர்லிங் ஹாலண்ட் சிறப்பாக பந்தை கடத்திச் சென்று தனது அணியின் முதல் கோலை போட்டார். அதன் பின் முதல் பாதி முடிவு வரையிலும், 2ம் பாதியிலும் கோல் விழவில்லை. அதனால், 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. அந்த சமயத்தில் ஸ்டாப்பேஜ் நேரத்தில் நடந்த ஆட்டத்தின்போது, வினிசியஸ் ஜூனியர், 90+3வது நிமிடத்தில் வியக்கத்தக்க வகையில் கோலடித்து அசத்தினார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ரியல் மாட்ரிட் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

மற்றொரு போட்டியில் பிஎஸ்ஜி – செல்ஸீ அணிகள் மோதின. போட்டியின் 6வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் குவிச்சா குவார்ட்ஸ்கெலியா முதல் கோல் போட்டார். அவரைத் தொடர்ந்து அதே அணியின் பிராட்லி பார்கோலா, 14வது நிமிடத்திலும் சென்னி மயுலு 62வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் போட்டனர். மாறாக, செல்ஸீ அணி வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 3-0 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த பிஎஸ்ஜி அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Tags : Champions League Football ,Real Madrid ,PSG ,Manchester ,Manchester City ,UEFA Champions League football ,Champions League ,Real… ,
× RELATED லண்டன் நிறுவனம் விலகியது; ஆர்சிபி...