புதுடெல்லி: நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய சுகாதார செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், “நாட்டின் சில இடங்கள் அதிக வெப்பநிலையை காண தொடங்கி உள்ளன. இதனால் தீவிர வெப்ப தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.
தீவிர வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நிர்வகிக்க, கண்காணிக்க திறம்பட்ட தயார் நிலையில் இருக்க வேண்டியதன் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில அரசுகள் அனுப்ப வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் அத்தியாவசிய மருந்துகள், திரவங்கள், ஓஆர்எஸ் போன்ற புத்துணர்ச்சி தரும் பானங்கள், போதுமான குடிநீர், குளிரூட்டும் சாதனங்கள் போதிய அளவில் இருப்பது உள்ளிட்டவை உறுதி செய்யப்பட வேண்டும்” என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
The post அதிகரிக்கும் வெப்பநிலை தயார் நிலையில் மாநிலங்கள்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

