×

போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடிய ரவுடிக்கு கை, காலில் முறிவு

நெய்வேலி, மார்ச் 28: நெய்வேலியை அடுத்த சொரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் கோபிநாத்(25). இவர் கடந்த 23ம் தேதி சொரத்தூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் ராக் என்கிற ராஜ்குமார்(27) என்பவர், அவரை வழிமறித்து, அசிங்கமாக திட்டி கல்லாலும், கத்தியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக நெய்வேலி நகர காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீசார், புலன் விசாரணை மேற்கொண்டதில் நெய்வேலி வட்டம் 5, சுடுகாடு அருகில் ராஜ்குமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முற்படும்போது ராஜ்குமார் தப்பி ஓடினார்.அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட ராக் (எ) ராஜ்குமார் மீது நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், வழிப்பறி, போலீசாரை தாக்கியது உள்பட 10 வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டவர்.

The post போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடிய ரவுடிக்கு கை, காலில் முறிவு appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Gopinath ,Ram ,Sorathur ,Murugavel ,Rag ,Rajkumar ,Setuthankuppam ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை