×

சாலைபுதூரில் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம், மார்ச் 28:சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக காசநோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காசநோய் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமையில் பங்கேற்ற சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து காசநோயின் தாக்கம், பரவும் அறிகுறி, அதைத் தடுக்கும் வழிமுறை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

The post சாலைபுதூரில் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Salaiputhur ,Sathankulam ,Salaiputhur Primary Health Center ,World TB Day ,Health ,Jesuraj ,Medical ,Thenmozhi… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை