×

ஏரல் பேரூராட்சி கூட்டம்

ஏரல், மார்ச் 28: ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கூட்டப் பொருள் மற்றும் 2025-26ம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது. முன்னதாக பேரூராட்சி துணைத் தலைவர் ஜான் ரத்தினபாண்டி மறைவிற்கு பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

The post ஏரல் பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Eral Town Panchayat ,Eral ,Electoral Town ,Panchayat ,Chairperson ,Sharmiladevi Manivannan ,Executive ,Subramanian ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா