×

பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

ஆறுமுகநேரி, மார்ச் 28: தெற்கு ஆத்தூர் பஞ். யூனியன் நடுநிலைப்பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆழ்வார்திருநகரி வட்டாரக்கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வடக்கு ஆத்தூர் பள்ளித் தலைமையாசிரியர் தேவசகாயம், ஆசிரியை திருமேனி முன்னிலை வகித்தனர். பஞ். யூனியன் பள்ளி தலைமையாசிரியர் ஸ்பெல்மேன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோருக்கு போக்சோ சட்டம் குறித்து ஆசிரியை சித்ராதேவி விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

The post பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Kindergarten graduation ceremony ,Arumuganeri ,South Athur Panch ,Union Middle School ,Alwar ,Thirunagari ,District ,Education Officer ,Balakrishnan ,North Athur School ,Principal ,Devasakhayam ,Teacher ,Thirumeni ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை