சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் சமீபமாக 7 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுன்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
The post கொள்ளையர்கள் உடனடி கைது கமிஷனர் அருணுக்கு பிரேமலதா பாராட்டு appeared first on Dinakaran.
