- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி ஷைரவதம்
- ஓ.
- எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமி
- தில்லி
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- ஆணையாளர்
- பாஜக
- பேராயர்
- எடப்பாடி பழனிசாமி ஷைரவதம்
தூத்துக்குடி : ஓ.பி.எஸ் உடன் இணைவது சாத்தியமே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சு, நடவடிக்கைகள் பாஜகவுடன் கூட்டணி உறுதியாவதை காட்டுகின்றன. அதே போல் அதிமுக ஒன்றிணைவதற்கான ஒளிவட்டம் தெரிவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறியிருந்தார்.
இதையடுத்து, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் உடன் இணைவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இருக்க ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு தகுதி இல்லை,” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை டெல்லி பயணம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்,”என்றார். மேலும் பேசிய அவர், “தமிழக பிரச்சினை குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும். குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு காவல்துறை மீது அச்சமில்லை. திமுக தவிர எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. எதிரிகளுக்கு அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம்,”என்றார்.
The post ஓ.பி.எஸ் உடன் இணைவது சாத்தியமே இல்லை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.
