×

‘அதிமுக, பாமக, பாஜக என நாங்க எல்லாம் கூட்டணிங்க’ -திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருளுடன் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டு வந்தார். அருகில் இருந்த பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம் “அதிமுக, பாமக, அப்புறம் பாஜக” என திண்டுக்கல் சீனிவாசன் கூறிவிட்டு சென்றார். சதாசிவத்துடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நாங்க எல்லாம் கூட்டணிங்க” என திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார். அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சு, நடவடிக்கைகள் பாஜகவுடன் கூட்டணி உறுதியாவதை காட்டுகின்றன. அமித் ஷாவை இரும்பு மனிதர் என புகழ்ந்து ஏற்கனவே ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார். கூட்டணி பற்றி அமித் ஷாவிடம் பேசவே இல்லை என எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார்.

The post ‘அதிமுக, பாமக, பாஜக என நாங்க எல்லாம் கூட்டணிங்க’ -திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Bamaka ,Bhajaka ,Dindigul Sinivasan ,Chennai ,Pamaka ,G. K. Mani ,Arul ,Bhamaka MLA Sadashivat ,Beyond Bhajaka ,Sadasivam ,Dinakaran ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...