- பெரிய அடிமை கட்சி
- அண்ணாமலை
- கோவா
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பஜாஜ்
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாகம் தலை நிமிர தமிழ்ஜனம்
கோவை: அதிமுக அடிமை கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியும் அடிமை கூட்டணிதான் என்று அண்ணாமலை ஒப்புதல் தெரிவித்து உள்ளார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: திமுக மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை அடிமை கட்சி எனவும், பாஜ சங்கி கட்சி எனவும், இரண்டு பேரும் டெல்லிக்கு அடிமையாக இருப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் பேசியுள்ளார்.
ஆமாம். என்னை பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சிதான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை. மக்களை எஜமானராக மதித்து, மக்களுக்கு அடிமையாக இருக்கக் கூடிய கட்சி அதிமுக. தேசிய ஜனநாயக கூட்டணியும் அடிமை கூட்டணிதான். இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களுக்கு அடிமை. தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் கூட்டணியை நீங்கள் அடிமை என சொன்னால், அதை பெருமையாக எங்கள் நெஞ்சில் அணிந்து கொண்டு, மக்களுக்காக 100 நாட்கள் இங்கே இருப்போம். களத்தில் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
