×

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி?.. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!!

சென்னை: இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுடன் பேசினேன் என திட்டவட்டமாக கூறினார். மேலும், கூட்டணி குறித்து கேட்டபோது, கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி இறுதி செய்யப்படும் என கூறினார். இந்நிலையில், அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு அமித் ஷாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது; “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா”.

மேலும், இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் அமித்ஷா. இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் இரும்பு மனிதரும் இந்தியாவின் இரும்பு மனிதரும் சந்தித்துக் கொண்டனர். அமித் ஷா -பழனிசாமி சந்திப்பு குறித்து அவரவர் பார்வையிலேயே வெவ்வேறு விதமாக கருத்துகளை கூறலாம். தமிழ்நாடு பாதிக்காமல் தொகுதி மறுசீரமைப்பு நடத்த அமித் ஷாவிடம் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார். இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் மறுவடிவமாக அமித் ஷாவை பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பா.ஜ.க., அதிமுக தலைவர்கள் மாறி மாறி விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோ அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

The post பாஜக – அதிமுக கூட்டணி உறுதி?.. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா: ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!! appeared first on Dinakaran.

Tags : BJP-AIADMK alliance ,Amit Shah ,Iron Man ,Sardar Vallabhbhai Patel ,R.P.Udayakumar ,Chennai ,AIADMK ,minister ,Edappadi Palaniswami ,Union Home Minister ,Iron ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி