- பெருவில் பொதுத் தேர்தல்கள்
- ஜனாதிபதி
- டினா போல்வார்டே
- லிமா
- பெட்ரோ காஸ்டிலோ
- பெரு
- தென் அமெரிக்கா
- பெருவில் தேர்தல்கள்
- தின மலர்
லிமா: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு 2022ல் டீனா பொலுவர்த்தே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் 2026ல் நிறைவடைகிறது. அந்த நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 93 சதவீத மக்கள் அதிபர் பொலுவர்த்தேவின் ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் செல்வாக்கு அற்ற அதிபர் என பெயரெடுத்துள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொது தேர்தல் நடைபெறும் என அதிபர் டீனா பொலுவர்த்தே அறிவித்துள்ளார். பெருவில் கடந்த 1990 முதல் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை. பல ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
The post பெரு நாட்டில் அடுத்த ஆண்டு பொது தேர்தல்: அதிபர் டீனா பொலுவர்த்தே அறிவிப்பு appeared first on Dinakaran.
