×

ஈடி முன்னாள் இயக்குனர் மிஸ்ரா பொருளாதார கவுன்சில் உறுப்பினராக நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: மிஸ்ராஇயக்குனராக பதவி வகித்த போது அவருக்கு பல முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சஞ்சய் மிஸ்ராவை (65) பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முழு நேர உறுப்பினராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது.1984ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான மிஸ்ராவை பிரதமர் மோடியின் ஒப்புதலோடு அரசு நியமித்துள்ளது. இவர் அமலாக்கத்துறை இயக்குனராக இருந்த போது பல மாநில முதல்வர்கள் உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மீது சட்ட விரோத பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஈடி முன்னாள் இயக்குனர் மிஸ்ரா பொருளாதார கவுன்சில் உறுப்பினராக நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Former ,ED ,Mishra ,Economic Council ,Union Government ,New Delhi ,Supreme Court ,Sanjay Mishra ,Prime Minister's Economic Advisory Council ,Former ED ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு...